உடல் பருமனுக்கு சிறந்த உணவு கொள்ளு

கொள்ளு கடின உழைப்பாளிகளுக்கு ஏற்ற உணவாகும். ‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி உள்ளது.

குதிரைவாலி

குதிரைவாலி சிறுதானியங்களில் மிகச் சிறந்த சத்துக்களை கொண்டதாகும். மற்ற தானியர்களைவிட அளவில் சிறியதாகும். குதிரை வாலி கோதுமையை விட அதிக சத்துக்களை கொண்டது. இந்தியாவில் ஆந்திரா,கர்நாடகா,பீகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும் பயிரிடப்படுகிறது.