உணவே மருந்து, மருந்தே உணவாகும்

தமிழர்களின் வாழ்வியலோடு பொருந்தி போகும் பாரம்பரியம் விருந்தோம்பல் அதிலும் நம் முன்னோர்கள் உணவிலும் ஆரோக்கியத்திலும் தனிக்கவனம் செலுத்தியுள்ள வரலாறு நம் காப்பியங்களிலும் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் நமது கால சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் மண்வளத்திற்கு ஏற்ப பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு அதை உணவாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர் காலங்கள் செல்ல செல்ல மக்கள் பல சூழ்நிலைகளிலும் நம் மரபு வகை உணவுகளையும் பயிர்களை மறந்து இன்றைய பரபரப்பான உலகுக்குள் துரிதமாக எல்லாமும் மாறினாலும் நம் மரபுகளை விரும்பும் சூழல் இன்றைய காலகட்டத்தில் உருவாகி வருகின்றன.

இன்றைய சூழல் உணவுக்கு பின் உணவுக்கு முன் என்று மருந்தாகி பலரது சேமிப்புகள் கரைந்து கொண்டிருந்தாலும் ஐயா நம்மாழ்வார் நெல் ஜெயராமன் போன்ற உள்ளங்களால் மரபுகை வகை பயிர்கள் மீட்டெடுக்கப்பட்டு பயிர் செய்யப்பட்டும் ஒரு உணவாகி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டனர் அதை இன்றைய இளம் தலைமுறைக்கு திரு சிவராமன் அவர்கள் கொண்டு சேர்த்துக் கொண்டு இருப்பது இன்று நம்பிக்கை அளிக்கிறது.

இவர்கள் மேற்கொண்ட அளப்பரிய செயல்களால் விவசாயிகளால் இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் மீட்டெடுக்கப்பட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது அதேபோல் நமது சிறுதானியங்களும் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்று வணிக சந்தையில் உருவாகியுள்ளது.

சிறுதானியங்களிலும் பாரம்பரிய அரசியலிலும் செய்யப்படும் உணவுகள் தனித்தன்மையானது ஒரு தனி மனிதன் தனது ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியில் நிறைவு செய்துவிடும் அளவுக்கு கூட்டங்கள் நிறைந்ததாகும் நமது வழக்கத்தில் ஒரு சொல் உள்ளது.

வைத்தியனுக்கு கொடுப்பதை பானியனுக்கு கொடு என்று உங்கள் உணவின் மீது கவனம் செலுத்தினால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்பதால் அது